/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அவிநாசி குறுமைய போட்டி; மாணவ, மாணவியர் அபாரம்
/
அவிநாசி குறுமைய போட்டி; மாணவ, மாணவியர் அபாரம்
ADDED : ஆக 21, 2024 12:21 AM

அவிநாசி;அவிநாசி அளவிலான குறுமைய விளையாட்டுப் போட்டிகள், எஸ்.கே.எல். பப்ளிக் பள்ளியில் நடைபெற்று வருகிறது.
அதில், நேற்று கூடைப்பந்து, டேபிள் டென்னிஸ் ஆகிய போட்டிகள் நடைபெற்றது. 14, 17, 19 வயதுக்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி அணிகள் விவரம்:
கூடைப்பந்து போட்டியில் மிக மூத்தோர் பிரிவில் எஸ்.கே.எல்., பள்ளியும், அம்மாபாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ண பள்ளியும் விளையாடியது. இதில், எஸ்.கே.எல்., அணி, 28 புள்ளிகள் பெற்று முதலிடமும், ஸ்ரீராமகிருஷ்ண பள்ளி, 8 புள்ளிகள் பெற்று இரண்டாமிடமும் பெற்றது.
டேபிள் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவில், 14 வயது பிரிவில், 'டீ பப்ளிக்' பள்ளி முதல் இடம், ஏ.வி.பி., பள்ளி இரண்டாமிடம், 17 வயது பிரிவில், 'டீ பப்ளிக் பள்ளி முதலிடம், எம்.எஸ்., வித்யாலயா பள்ளி இரண்டாமிடம், 19 வயது பிரிவில், 'டீ பப்ளிக்' பள்ளி முதலிடம், ஏ.வி.பி., பள்ளி இரண்டாமிடமும் பெற்றன.
டேபிள் டென்னிஸ் இரட்டையர் பிரிவில், 14 வயது பிரிவில், ஏ.வி.பி., பள்ளி முதலிடம், 'டீ பப்ளிக்' பள்ளி இரண்டாமிடம், 17 வயது பிரிவில், எம்.எஸ். வித்யாலயா முதலிடம், 'டீ பப்ளிக்' பள்ளி இரண்டாமிடம், 19 வயது பிரிவில், 'டீ பப்ளிக்' பள்ளி முதலிடம், எம்.எஸ்., வித்யாலயா இரண்டாமிடமும் பெற்றது.