/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பஸ் மீது விழுந்த மரக்கிளை அசம்பாவிதம் தவிர்ப்பு
/
பஸ் மீது விழுந்த மரக்கிளை அசம்பாவிதம் தவிர்ப்பு
ADDED : மார் 28, 2024 05:08 AM

பல்லடம், : உடுமலையில் இருந்து - அரசு பஸ் நேற்று மாலை, 35 பயணிகளுடன் பல்லடம் நோக்கி வந்தது.
உடுமலை - பொள்ளாச்சி ரோடு சந்திப்பு அருகே, ரோட்டோரத்தில் இருந்த பழமையான 'மே பிளவர்' மரத்தின் ஒரு பகுதி முறிந்து விழுந்தது. முறிந்த மரக்கிளை பஸ்சின் முகப்பு கண்ணாடி மற்றும் இடதுபக்க ஜன்னல் கண்ணாடிகள் சிலவற்றை உடைத்துக் கொண்டு கீழே விழுந்தது. உஷாரான டிரைவர், உடனடியாக பஸ்சை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து ரோட்டோரத்தில் நிறுத்தினார்.
ஜன்னல் கண்ணாடிகள் உடைந்ததில், பஸ்ஸில் அமர்ந்திருந்த பயணிகள் மூன்று பேருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டன. இதனால், பயணிகள் அனைவரும் மாற்று பஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
மரக்கிளை முறிந்து விழுந்த நிலையில், டிரைவரின் சாதுர்யத்தால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. பல்லடம் போலீசார் விசாரிக்கின்றனர்.