/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விழிப்புணர்வு பலகைகள்; விபத்து ஏற்படும் அபாயம்
/
விழிப்புணர்வு பலகைகள்; விபத்து ஏற்படும் அபாயம்
ADDED : மார் 12, 2025 12:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல்லடம்; வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு கருதி, மாநில நெடுஞ்சாலைத் துறை மூலம், பல்வேறு நெடுஞ்சாலைகளிலும் விழிப்புணர்வு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு, பல்லடம் - திருப்பூர் ரோடு மற்றும் பொள்ளாச்சி ரோட்டில் வைக்கப்பட்டுள்ள விழிப்புணர்வு பலகைகள், வாகனங்கள் மோதி சேதமடைந்ததன் காரணமாக, இவற்றின் இரும்பு பில்லர்கள் வளைந்து, பலகைகள் கீழே விழும் நிலையில் உள்ளன. விழிப்புணர்வு பலகைகளின் அருகே, கடைகள், கட்டடங்கள் உள்ளன.
மேலும், ரோட்டோரத்தில் இவை உள்ளதால், கீழே விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சேதமடைந்த விழிப்புணர்வு பலகைகளை அகற்ற நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.