/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஊசி ஈ தாக்குதல் கட்டுப்பாடு மாணவர்கள் விழிப்புணர்வு
/
ஊசி ஈ தாக்குதல் கட்டுப்பாடு மாணவர்கள் விழிப்புணர்வு
ஊசி ஈ தாக்குதல் கட்டுப்பாடு மாணவர்கள் விழிப்புணர்வு
ஊசி ஈ தாக்குதல் கட்டுப்பாடு மாணவர்கள் விழிப்புணர்வு
ADDED : மே 23, 2024 11:16 PM

உடுமலை;பட்டுப்புழு வளர்ப்பில், ஊசி ஈ தாக்குதலை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து, பட்டுப்புழுவியல் துறை மாணவர்கள் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பட்டுப்புழு வளர்ப்பு தொழில், உடுமலையில் பிரதானமாக மேற்கொள்ளப்படுகிறது. மாநில அளவில் இத்தொழிலில் உடுமலை பகுதி முதன்மை வகிக்கிறது.
இந்நிலையில், தமிழ்நாடு வேளாண் பல்கலை., யின், வனக்கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் பட்டுப்புழுவியல் துறை மாணவர்கள், உடுமலை பகுதியில் கிராம தங்கல் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்று வருகின்றனர்.
இம்மாணவர்கள் மானுப்பட்டி கிராமத்தில், பட்டுக்கூடு உற்பத்தியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளிடம் கலந்துரையாடினர். அப்போது, பட்டுப்புழு வளர்ப்பில், ஊசி ஈ தாக்குதலால், பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது.
இத்தாக்குதலை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும், புழு வளர்ப்பு மனையில், கடைபிடிக்க வேண்டிய சுகாதார வழிமுறைகள் குறித்து செயல்விளக்கம் அளித்தனர்.
விவசாயத்துக்காக பயன்படுத்தப்படும் மத்திய, மாநில அரசுகளின் மொபைல் செயலி குறித்தும், மாணவர்கள் பரத்குமார், ஜெயமுருகன், லோகேஷ்குமார் மற்றும் மதன் விளக்கினர். விவசாயிகளின் பல்வேறு சந்தேகங்களுக்கும் மாணவர்கள் விளக்கம் அளித்தனர்.