/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கால்நடை மருத்துவ கல்லுாரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
கால்நடை மருத்துவ கல்லுாரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
கால்நடை மருத்துவ கல்லுாரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
கால்நடை மருத்துவ கல்லுாரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : மார் 09, 2025 11:11 PM

உடுமலை; உடுமலை கால்நடை மருத்துவ கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், கறிக்கோழி பண்ணையாளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
கோழிக்குட்டை கல்லுாரி வளாகத்தில், கல்லுாரியின் கால்நடை உணவியல் துறை சார்பில், இந்நிகழ்ச்சி நடந்தது. கல்லுாரி முதல்வர் மணிவண்ணன் தலைமை வகித்து, கறிக்கோழிகளில் 'ஆண்டிபயாடிக்' பயன்பாடு குறித்து பேசினார்.
கறிக்கோழிகளின் இறைச்சியில் நுண்ணுயிர் எதிர்ப்பு மிச்சங்கள் ஏற்படுத்தும் விளைவுகள், 'ஆண்டிபயாடிக்' மருந்துக்கு மாற்றாக பயன்படுத்தப்படும் தீவன சேர்க்கைகள், கறிக்கோழி வளர்ப்பில் சிறந்த மேலாண்மை நடைமுறைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.
நொய்டா ஜூபிலியன்ட் புட் ஒர்க்ஸ் லிட்., துணை பொது மேலாளர் செந்தில்நாதன், கால்நடை உணவியல் துறை தலைவர் கதிர்வேலன் உள்ளிட்ட பலர் பேசினர். உதவி பேராசிரியர் பாலமுருகன் நன்றி தெரிவித்தார். நிகழ்ச்சியில் பங்கேற்ற கறிக்கோழி பண்ணையாளர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.