/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாணவர்களின் படைப்புகளை வெளிப்படுத்த விழிப்புணர்வு சிறப்பு குழுவினர் ஆய்வு
/
மாணவர்களின் படைப்புகளை வெளிப்படுத்த விழிப்புணர்வு சிறப்பு குழுவினர் ஆய்வு
மாணவர்களின் படைப்புகளை வெளிப்படுத்த விழிப்புணர்வு சிறப்பு குழுவினர் ஆய்வு
மாணவர்களின் படைப்புகளை வெளிப்படுத்த விழிப்புணர்வு சிறப்பு குழுவினர் ஆய்வு
ADDED : ஆக 09, 2024 01:02 AM
உடுமலை;பள்ளிக்கல்வித்துறையின் சார்பில், மாணவர்களுக்கான கல்வித்துறை இதழ்கள் படிப்பது குறித்து, சிறப்பு குழுவினர் ஆய்வு நடத்தினர்.
பள்ளிக்கல்வித்துறையின் சார்பில், மாணவர்களின் வாசிப்புத்திறனை மேம்படுத்துவதற்கு, புது ஊஞ்சல் மற்றும் தேன்சிட்டுஉள்ளிட்ட இரண்டு இதழ்கள் பள்ளிகளுக்கு வழங்கப்படுகின்றன. இதில், பல்வேறு அரசு பள்ளி மாணவர்களின் படைப்புகள் தொடர்ந்து பிரசுரிக்கப்படுகின்றன.
மாணவர்களிடம் இந்த இதழ்கள் குறித்த விழிப்புணர்வு, வாசிப்புத்திறன் மற்றும் படைப்புகளை அனுப்புவதற்கான ஆர்வம் குறித்து, ஆய்வு நடத்துவதற்கு மாவட்டந்தோறும் ஆசிரியர்கள் சிறப்பு குழுக்களாக பிரிந்து, பள்ளிகளில் சென்று ஆய்வு நடத்துகின்றனர்.
திருப்பூர் மாவட்ட அளவில், உடுமலை அரசு பள்ளிகளில் முதற்கட்டமான ஆய்வுடன் கூடிய கலந்துரையாடல் நிகழ்ச்சி துவங்கியது.
உடுமலை ருத்ரப்ப நகர் நகராட்சி நடுநிலைப்பள்ளி, சிவசக்தி காலனி அரசு உயர்நிலைப்பள்ளியிலும், ஆசிரியர்கள் சிறப்பு இதழ்கள் குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடினர்.
நிகழ்ச்சியை, உடுமலை வட்டார கல்வி அலுவலர் சரவணகுமார் துவக்கி வைத்தார்.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரான், இந்த இதழ்களுக்கு எவ்வாறு படைப்புகளை அனுப்புவது, கதைகளை உருவாக்கும் விதம், கட்டுரைகள் எழுதுவது, ஓவியங்கள் வரைவது குறித்து மாணவர்களுக்கு விளக்கமளித்தார்.
ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரான் கூறியதாவது:
மாணவர்களிடம் பல்வேறு திறன்கள் உள்ளன. பள்ளி அளவில் போட்டிகளில் பங்கேற்று தங்களின் ஆர்வத்தை வெளிப்படுத்துகின்றனர்.
பள்ளி அளவில் மட்டுமின்றி, அனைத்து பள்ளிகளிலும் மற்ற பள்ளி மாணவர்களின் திறன்களை கொண்டுசேர்ப்பது தான் இந்த இதழ் வழங்கப்படுவதன் நோக்கம். மாணவர்களுக்கு இதுகுறித்து பள்ளிகளில் விழிப்புணர்வு குறைவாக உள்ளது.
இதழ்களுக்கு படைப்புகளை அனுப்புவதால், அவர்களின் திறன் வெளிப்படுவதுடன், அதை வாசிக்கும் பழக்கமும் மேம்படுகிறது.
இவ்வாறு கூறினார்.
* உடுமலை, பூலாங்கிணர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும் சிறார் இதழ்கள் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.
பூலாங்கிணர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கணேசன் தலைமை வகித்தார். தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் மணி முன்னிலை வகித்தார். தமிழாசிரியர் ரேணுகாதேவி வரவேற்றார்.
சிறார் இதழ்களில் உள்ள கவிதைகள், ஓவியங்கள், விடுகதைகள் குறித்த தகவல்கள் எடுத்துக்கூறப்பட்டது.
மாணவர்கள் இந்த இதழ்கள் வாயிலாக, தங்களின் திறன்களை வெளிப்படுத்தினால், வெளிநாடு செல்வதற்கும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து மாணவர்களுக்கான வினா- விடை நிகழ்ச்சி நடந்தது. தமிழாசிரியர் சரவணன் நன்றி தெரிவித்தார்.