/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வேடபட்டியில் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு
/
வேடபட்டியில் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு
ADDED : மே 23, 2024 11:30 PM
உடுமலை:மடத்துக்குளம் அருகேயுள்ள வேடபட்டியில், வேளாண் துறை, மணக்கடவு வாணவராயர் வேளாண் கல்லுாரி மாணவியர் மற்றும் வங்கிகள் சார்பில், விவசாயிகளுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
தமிழ்நாடு கிராம வங்கி உள்ளிட்ட வங்கிகள், விவசாயிகளுக்கு செயல்படுத்தும் திட்டங்கள், மத்திய அரசின் பிரதான் மந்திரி பீமா யோஜனா, அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், நில மேம்பாட்டுத் திட்டம், பால் பண்ணை கடன் உள்ளிட்ட திட்டங்கள் குறித்தும், கடன், திருப்பிச் செலுத்தும் காலம், அதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்து.
அதே போல், பொங்கலுார் கே.வி.கே., நிறுவனம் சார்பில், திட்ட ஒருங்கிணைப்பாளர் சரவணன், பூச்சியியல் துறை சார்ந்த செய்திகள் மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கினார்.
மண்ணியல் துறை குறித்து ரேணுகா தேவி, மண்ணியல் துறை சார்ந்த ஆராய்ச்சிகள் மற்றும் செயல்கள் குறித்தும், கால்நடை வளர்ப்பு குறித்து, பேராசிரியர் சுமித்ரா, கால்நடை வளர்ப்பு, செம்மறியாடு, திறன் மேம்பாட்டிற்கான தொழில்நுட்ப மதிப்பீடு குறித்து விளக்கினார்.