/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நால் ரோடு சந்திப்பில் நிழற்கூரை அவசியம்
/
நால் ரோடு சந்திப்பில் நிழற்கூரை அவசியம்
ADDED : ஏப் 10, 2024 12:44 AM
உடுமலை;குறிச்சிக்கோட்டை நால்ரோடு சந்திப்பில், நிழற்கூரை இல்லாததால், அனைத்து தரப்பினரும் அவதிக்குள்ளாகின்றனர்.
உடுமலை - மூணாறு, தளி - குமரலிங்கம் ரோடு சந்திப்பு பகுதி, குறிச்சிக்கோட்டையில் அமைந்துள்ளது. பல்வேறு பகுதிகளில் இருந்து பள்ளிக்கு வரும் மாணவ, மாணவியர், நால்ரோடு பஸ் ஸ்டாப்பில், பஸ்சுக்காக காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், அப்பகுதியில், பஸ் ஸ்டாப் நிழற்கூரை வசதியில்லாததால், அனைத்து தரப்பினரும் சிரமப்பட்டு வருகின்றனர்.
வெயில் காலத்தில், பஸ்சுக்காக காத்திருக்க முடியாமல் தவிக்கின்றனர். எனவே, அப்பகுதியில், நிழற்கூரை கட்ட வேண்டும் என, பல ஆண்டுகளாக, கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. இதனால், அப்பகுதி மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

