/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பேட்மின்டன் தேர்வுத்திறன் போட்டி
/
பேட்மின்டன் தேர்வுத்திறன் போட்டி
ADDED : ஆக 08, 2024 11:33 PM
திருப்பூர் மாவட்ட பால் பேட்மின்டன் கழக பொதுச்செயலாளர் பாலகுமார் அறிக்கை: திருப்பூர் மாவட்ட பூப்பந்தாட்ட கழகம் சார்பில், வரும், 11ம் தேதி, காலை, 8:00 மணிக்கு, திருப்பூர் கொங்கு மெயின் ரோடு, சின்னச்சாமி அம்மாள் பள்ளி மைதானத்தில், திருப்பூர் மாவட்ட சப்-ஜூனியர் பிரிவு ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தேர்வுத்திறன் போட்டி நடைபெற உள்ளது.
கடந்த, 2009, ஜன., 2ம் தேதி, அதற்கு பின் பிறந்தவர்கள், தனி நபராகவோ அல்லது குழுவாகவோ, போட்டியில் பங்கேற்கலாம். போட்டியில் பங்கேற்பவர்கள், ஆதார் கார்டு மற்றும் வயதுச்சான்று நகல் கட்டாயம் எடுத்து வர வேண்டும்.
இதில் தேர்வு செய்யப்படும் வீரர், வீராங்கனைகள், திருப்பூர் மாவட்ட அணி சார்பில், மாநில அளவிலான சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். விபரங்களுக்கு, 98945-00700 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.