ADDED : மார் 24, 2024 01:37 AM
அ நிறம் | அளவு
காங்கேயம், முத்துார் அருகேயுள்ள அத்தாம்பாளையம் புதுாரை சேர்ந்தவர் சாமிநாதன், 50; முத்துாரில் ஒரு பேக்கரியில் தங்கி வேலை செய்தார்.
நேற்று அதிகாலை தான் தங்கியிருந்த அறையில், மூச்சு பேச்சின்றி கிடந்தார். சக ஊழியர்கள் மீட்டு காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதனையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிந்தது. இதுகுறித்து வெள்ளகோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.
