/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பேக்கரி ஊழியருக்கு கத்திக்குத்து
/
பேக்கரி ஊழியருக்கு கத்திக்குத்து
ADDED : மே 24, 2024 12:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொங்கலுார்;பேக்கரி ஊழியரை கத்தியால் குத்திய ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர், காங்கயம் ரோடு, நாச்சிபாளையத்தில் ஒரு பேக்கரி உள்ளது. அதில் கோபாலகிருஷ்ணன், 38 என்பவர் கேஷியராக வேலை பார்த்து வருகிறார். கடைக்கு வந்த திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த கனகராஜ் மகன் நிகுல்ராஜ், 28 என்பவர் உடன் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில், நிகுல்ராஜ் கோபாலகிருஷ்ணனை கத்தியால் குத்தியுள்ளார். அவர் உடனடியாக திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நிகுல்ராஜ் ஏற்கனவே மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் என்று கூறப்படுகிறது. அவிநாசிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.