/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பலே திருடன் கைது ;40 வழக்கில் தொடர்பு
/
பலே திருடன் கைது ;40 வழக்கில் தொடர்பு
ADDED : மே 31, 2024 01:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொங்கலுார்';பொங்கலுார், அம்மன் நகரை சேர்ந்தவர் கவுரி. கடந்த 21ல், இவரது வீட்டில் ஆறு பவுன் நகைகள் மற்றும் நான்கு லட்சம் ரூபாய் திருடப்பட்டது.
பொங்கலுார் சக்தி நகரைச் சேர்ந்தவர் முருகேசன், 52; இவரது வீட்டில் அதே நாளில் வெள்ளி குத்து விளக்கு, வெள்ளி டம்ளர், 45 ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டன. அவிநாசிபாளையம் போலீசார் வழக்கு பதிந்து, கோவை கணபதியைச் சேர்ந்த நடராஜன்,56 என்பவரைக் கைது செய்து, அவரிடம் இருந்து நகை, பணத்தை மீட்டனர். இவர் மீது 40க்கும் மேற்பட்ட திருட்டு வழக்கு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.