/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மூங்கில் மரக்கன்றுகள் பூங்காவில் நடப்பட்டன
/
மூங்கில் மரக்கன்றுகள் பூங்காவில் நடப்பட்டன
ADDED : ஜூலை 21, 2024 11:45 PM

திருப்பூர்:'டிரீம்-20' பசுமை அமைப்பு சார்பில், 'வனத்துக்குள் திருப்பூர்' மற்றும் 'பி - மில் வாக்கர்ஸ் கிளப்' உடன் இணைந்து, மரக்கன்று நடும் விழா நேற்று நடந்தது. ஊத்துக்குளி ரோடு, புதிய மேம்பாலம் அருகில், மாநகராட்சி பூங்கா இடத்தில், மூங்கில் மற்றும் பிற மரக்கன்றுகள் நடப்பட்டன. நேற்று காலை நடந்த நிகழ்ச்சியில், நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று, மரக்கன்றுகள் நட்டனர்.
'பூமியை மாசுபடுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்போம்', 'வீடுகளில் சேகரமாகும் குப்பையை தரம் பிரித்து வழங்குவோம்' என்று உறுதிமொழி ஏற்றனர். வரும் நாட்களில், காலியிடங்களில் மரக்கன்று நட்டு வளர்க்கவும் முடிவு செய்யப்பட்டது.
**