sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பனியன் பஜார்! புதிய எம்.பி., குரல் கொடுப்பார்களா? பனியன் சிறு உற்பத்தியாளர் எதிர்பார்ப்பு

/

பனியன் பஜார்! புதிய எம்.பி., குரல் கொடுப்பார்களா? பனியன் சிறு உற்பத்தியாளர் எதிர்பார்ப்பு

பனியன் பஜார்! புதிய எம்.பி., குரல் கொடுப்பார்களா? பனியன் சிறு உற்பத்தியாளர் எதிர்பார்ப்பு

பனியன் பஜார்! புதிய எம்.பி., குரல் கொடுப்பார்களா? பனியன் சிறு உற்பத்தியாளர் எதிர்பார்ப்பு


ADDED : ஜூன் 19, 2024 06:02 AM

Google News

ADDED : ஜூன் 19, 2024 06:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : மத்திய, மாநில அரசுகளின் மானிய உதவியுடன், பனியன் மார்க்கெட்டுகள் அமைக்க, புதிய எம்.பி.,க்கள் குரல் கொடுக்க வேண்டுமென, பொதுமக்கள் தொழில் துறையினர் எதிர்பார்க்கின்றனர்.

திருப்பூர் நகரம், பனியன் ஆடை உற்பத்தியின் தலைநகராக உள்ளது. குறிப்பாக, பருத்தி ஆடை உற்பத்தியில் தனி மதிப்பு பெற்றுள்ளது. திருப்பூரில் உற்பத்தியாகும் பனியன் ஆடைகள், நாடு முழுவதும் விற்பனைக்கு செல்கின்றன. குழந்தைகள் ஆடைகள், சிறுவர் - சிறுமியருக்கான ஆடைகள், விளையாட்டு ஆடைகள், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ஆடைகள் உற்பத்தியாகின்றன.

உள்ளாடைகள் மட்டும் தயாரிக்கப்பட்ட நிலைமாறி, அனைத்து வயதினருக்கும் ஏற்ற ஆடைகள், பின்னல் துணியில் வடிவமைக்கப்படுகின்றன. திருப்பூரில் முதன்முறையாக, ஏற்றுமதி ஆர்டருக்கான சரக்கு மீதமாகும் போது, ேஷாரூம்களில் வைத்து விற்கப்பட்டன.

நாடு முழுவதும் உள்ள உள்நாட்டு சந்தைகளுக்கு தேவையான ஆடைகள் இங்கு உற்பத்தியாகிறது; அவை ரயில் மூலமாகவும், கன்டெய்னர் லாரிகள் வாயிலாகவும் அனுப்பி வைக்கப்படுகிறது. இவ்வளவு வளர்ச்சி பெற்ற திருப்பூரில், பெரிய பனியன் சந்தை கிடையாது.

ஒருங்கிணைந்த பனியன் மார்க்கெட் இல்லாத காரணத்தால், தனியார் கடைகளில், பனியன் ஆடைகள் விற்கப்படுகின்றன. குறு வியாபாரிகள் இணைந்து, நிலத்தை வாடகைக்கு பிடித்து, சிறிய ெஷட் அமைத்து விற்கின்றனர். திருப்பூர் வரும் வெளிமாவட்ட மக்கள், பனியன் ஆடைகள் வாங்க, எங்கே செல்வது என்ற தெரியாமல் குழம்புகின்றனர்.

காதர்பேட்டையை பொறுத்தவரை, சில்லறை வியாபாரிகளுக்கான மொத்த வியாபாரம் மட்டுமே நடக்கிறது. ஞாயிற்றுக்கிழமை மட்டும், சிறு வியாபாரிகள் சில்லரை விற்பனை செய்கின்றனர். சிலமாத இடைவெளியில், உள்ளாடைகள் முதல் 'டி-சர்ட்,' டிராயர், டிரக் பேண்ட் போன்ற ஆடைகள் விற்பனை தொடர்ந்து நடக்கிறது.

குறு, சிறு வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில், திருப்பூரின் முக்கிய இடங்களில் பனியன் பஜார் மார்க்கெட்டுகளை அமைக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள், சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்து. மாநகரப்பகுதியில் புதிய பனியன் பஜார் மார்க்கெட் அமைக்கும் திட்டத்தை அறிவிக்க வேண்டும்.

இதுகுறித்து பனியன் வியாபாரிகள் கூறியதாவது:

திருப்பூரில் உற்பத்தியாகும் ஆடைகள், வெளிமாவட்டங்களில் விற்பனைக்கு செல்கின்றன. உள்ளூரில், பனியன் ஆடைகள் விற்பனைக்கான தனி மார்க்கெட் வசதியில்லை. திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த எம்.பி.,க்கள் இணைந்து, மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து, பனியன் மார்க்கெட் அமைக்கும் சிறப்பு திட்டத்தை பெற்றுத்தர வேண்டும்.

நகரப்பகுதி மட்டுமல்லாது, நான்கு மண்டல பகுதிகளிலும், தனித்தனி பனியன் மார்க்கெட் அமைக்கலாம். இடவசதி குறைவாக இருந்தாலும், அடுக்குமாடி வணிக வளாகம் கட்டும் திட்டம் வாயிலாக, பனியன் பஜார் மார்க்கெட் அமைக்க திட்டமிட வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us