/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பி.ஏ.பி., நீர் நிறுத்தம்; செயற்கை வறட்சி
/
பி.ஏ.பி., நீர் நிறுத்தம்; செயற்கை வறட்சி
ADDED : மார் 03, 2025 03:55 AM
திருப்பூர் : பி.ஏ.பி., நீர் வினியோகம் நிறுத்தப் பட்டுள்ளதால், செயற்கை வறட்சி ஏற்படும் வாய்ப்புள்ளதாக விவசாயி கள் கூறுகின்றனர்.
பி.ஏ.பி., வெள்ள கோவில் கிளை கால்வாய் பாதுகாப்பு சங்க தலைவர் வேலுசாமி கூறியதாவது:
கான்டூர் கால்வாயில், தற்போது நீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. பி.ஏ.பி., நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் கண்டு கொள்ளாத நிலையே இதற்கு காரணம். சர்க்கார்பதி மின் உற்பத்தி நிலையத்தில், மின் உற்பத்தி செய்யப்படும் இயந்திரத்தில் ஏற்பட்டுள்ள கோளாறு தான் இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
கடந்த ஓராண்டில் மட்டும், தொடர்ந்து மூன்று முறை, கால்வாயில் சரியான நேரத்தில் தண்ணீர் திறக்கப்படுவதிலும், கால்வாயை திறம்பட பயன் படுத்துவதிலும் குளறுபடி நடந்திருக்கிறது. இதனால் திருப்பூர், கோவை மாவட்டங்களில் செயற்கை வறட்சி ஏற்படும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
தற்போதைய நிலவரப்படி, இம்மாதம், 15ம் தேதி, திருமூர்த்தி அணையில் இருந்து, மூன்றாவது மண்டலம், இரண்டாவது சுற்றுக்கு நீர் திறக்கப்படுவதாக கூறப்படுகிறது. எனவே, ஐந்து சுற்றுக்கு நீர் எப்போது வினியோகிக்கப்படும் என்பதை அதிகாரிகள், உறுதிப்படுத்த வேண்டும்.