ADDED : மே 30, 2024 12:37 AM
பல்லடம் : பல்லடத்தில் நடந்த அடிதடி வழக்கில், தனியார் ஊழியர் இருவரை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரம்பட்டி கிரா மத்தை சேர்ந்தவர் கருத்தமலை 45. பல்லடம் அருகே பனப்பாளையத்தில் உள்ள சைசிங் நிறுவனம் ஒன்றில் தொழிலாளியாக வேலை பார்க்கிறார். ஒன்றரை ஆண்டுக்கு முன், தனியார் கன்சல்டிங் நிறுவனம் ஒன்றில் பைக் வாங்கினார். இதற்கான, தவணைத் தொகையை சரியாக திருப்பி செலுத்தாமல், பைக்குடன் தலைமறைவானார்.
கன்சல்டிங் நிறுவன ஊழியர்கள், கருத்தமலையை தேடி வந்த நிலையில், லட்சுமி மில் அருகே அவரை பார்த்துள்ளனர். ஆத்திரமடைந்த அவர்கள் அவரை தாக்கியுள்ளனர். படுகாயம் அடைந்த கருத்தமலை திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.
இது தொடர்பான புகா ரின் பேரில், கன்சல்டிங் நிறுவன ஊழியர்கள் சுரேஷ், 42 மற்றும் கண்ணன், 40 ஆகிய இருவரையும் போலீசார்கைது செய்தனர்.