ADDED : ஜூன் 08, 2024 12:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அனுப்பர்பாளையம்;திருப்பூர் மாநகராட்சி, பத்மாவதிபுரம் கிளை மா.கம்யூ., சார்பில், அடிப்படை வசதிகள் கேட்டு, பொதுமக்கள் முதலாம் மண்டல அலுவலகத்தில், உதவி கமிஷனர் கனகராஜிடம் அளித்த மனு:
திருப்பூர் மாநகராட்சி, 13 மற்றும் 23 வார்டுக்கு உட்பட்ட பத்மாவதிபுரம், காந்தி நகர், ஏ.வி.பி., லே அவுட், ஜீவா காலனி, ஆகிய பகுதிகளில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு, இரண்டு வாரங்களுக்கு மேலாகி விட்டது. இதனால், பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
சீரான இடைவெளியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் ஐந்து நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. அதனை கட்டுப்படுத்த வேண்டும். தார் சாலை அமைக்காத வீதிகளில் தார் சாலை அமைக்க வேண்டும்.