sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கட்டடம் வாடகைக்கு விடுவதில் கவனம்!: திருப்பூர் மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை

/

கட்டடம் வாடகைக்கு விடுவதில் கவனம்!: திருப்பூர் மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை

கட்டடம் வாடகைக்கு விடுவதில் கவனம்!: திருப்பூர் மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை

கட்டடம் வாடகைக்கு விடுவதில் கவனம்!: திருப்பூர் மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை


ADDED : ஜூலை 21, 2024 11:11 AM

Google News

ADDED : ஜூலை 21, 2024 11:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: பொதுமக்கள், நிலம் அல்லது கட்டடத்தை, அனுமதி பெறாத தொழில்களுக்கு வாடகைக்கு விட வேண்டாம் என, மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.

மழைக்காலம் துவங்கியுள்ளதால், நீர்நிலைகளில் சாயக்கழிவு நீர் கலப்பதாக, பொதுமக்கள் குற்றம்சாட்டியிருந்தனர். திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகளால், நீர்நிலைகள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டுமென, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் ஆய்வின் போது, அனுமதியின்றி இயங்கி வரும், பட்டன் ஜிப், பிரின்டிங் தொழிற்சாலைகள் முறைகேடாக இயங்குவது தெரியவந்தால், மாவட்ட நிர்வாகத்தின் ஒருங்கிணைப்பு குழு வாயிலாக, மின் இணைப்பு துண்டிப்பு மற்றும் ஆலையை மூடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இந்நிலையில், 'நீர்நிலைகளில் கலக்கும் சாயக்கழிவு' என்ற தலைப்பில், 'தினமலர்' நாளிதழில், படத்துடன் செய்தி வெளியாகியிருந்தது. அதன் எதிரொலியாக, மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது.

பொதுமக்கள், தங்கள் நிலத்தையோ, கட்டடத்தையோ, அனுமதி பெறாத தொழிலுக்கு வாடகைக்கு விட வேண்டாம் என, மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது. தங்கள் குடியிருப்புகளுக்கு அருகே, சாயக்கழிவை வெளியேற்றும் ஆலைகள் குறித்தும், நீர் நிலைகளில் வெளியேற்றப்பட்டு, திறம் மாறுவது குறித்தும், பொதுமக்கள் பறக்கும் படையிடம் புகார் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்., மாதத்தில் இருந்து, மாவட்ட ஒருங்கிணைப்பு குழு வாயிலாக, 23 தொழிற்சாலைகளின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. முறைகேடாக இயங்கிய மூன்று ஆலைகள், கடந்த வாரம் மூடப்பட்டு, மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

சாயக்கழிவு வெளியேறுவது தெரியவந்தால், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகத்துக்கு, 80560 33416, உதவி பொறியாளரை, 78455 52693, பறக்கும்படை சுற்றுச்சூழல் பொறியாளர் 78455 52938 என்ற எண்களில் அணுகலாம் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us