/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வி.வி.பேட் தயார்படு த்த 'பெல்' இன்ஜினியர் குழு
/
வி.வி.பேட் தயார்படு த்த 'பெல்' இன்ஜினியர் குழு
ADDED : ஏப் 08, 2024 11:29 PM
திருப்பூர்;திருப்பூர் லோக்சபா தொகுதியில் உள்ள ஆறு சட்டசபைகளில், மொத்தம் 1,745 ஓட்டுச்சாவடிகள் அமைந்துள்ளன. லோக்சபா தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெறுகிறது.
ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் தேவையைவிட 20 சதவீதம் கூடுதல் எண்ணிக்கையில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அந்தந்த சட்டசபை தொகுதிகளில் உள்ள உதவி தேர்தல் நடத்தும் அலுவலகங்களில் ஸ்ட்ராங் ரூம் அமைக்கப்பட்டு, போலீஸ் பாதுகாப்புடன் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. ஆறு சட்டசபை தொகுதிகளில் மொத்தம் 2,081 பேலட் யூனிட்; 2081 கன்ட்ரோல் யூனிட்; 2255 வி.வி.பேட் உள்ளன.
திருப்பூர் தொகுதியில், வேட்பாளர் 13 பேர் தேர்தல் களம் காண்கின்றனர். வேட்பாளர் விவரங்களுடன் கூடிய பேலட்ஷீட்கள் பிரின்ட் செய்யப்பட்டு, தொகுதிவாரியாக பிரித்து அனுப்பப்பட்டுள்ளது.
வாக்காளர்கள், தாங்கள் விரும்பிய வேட்பாளருக்கு ஓட்டளித்ததை, உறுதி செய்துகொள்வதற்காக வி.வி.பேட் இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பட்டனை அழுத்தும்போது, வி.வி.பேடில், வேட்பாளரின் சின்னம் பொறித்த ரசீது தோன்றும்.
ஆறு சட்டசபை தொகுதிகளுக்கும் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டநிலையில், அடுத்தகட்டமாக, வி.வி.பேடில் சின்னங்கள் லோட் செய்யும் பணி நடைபெற உள்ளது.
இதற்காக, பெங்களூருவிலிருந்து பெல் இன்ஜினியர்கள் 12 பேர் இன்று திருப்பூர் வருகின்றனர். தொகுதிக்கு இரண்டு இன்ஜினியர்கள் அனுப்பப்பட்டு, நாளை முதல் (10ம் தேதி), ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் ஓட்டுப்பதிவுக்கு தயார்படுத்தும் பணி துவங்குகிறது. அந்தியூர், பவானி, பெருந்துறை, கோபி தொகுதியில், அந்தந்த தாலுகா அலுவலகங்களிலும்; திருப்பூரில் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் குமரன் மகளிர் கல்லுாரியிலும் சின்னங்கள் லோடு செய்யும் பணி நடைபெறும்.
வி.வி., பேடில் 13 வேட்பாளர் மற்றும் 'நோட்டா'வுக்கான சின்னங்கள் வைக்கப்படுகிறது; மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சரிபார்த்தல்; பேலட் யூனிட்டில் வேட்பாளர் பெயர் மற்றும் புகைப்படம் சின்னம் பொறித்த பேலட்ஷீட் வைக்கப்படுகிறது.

