/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பத்ரகாளியம்மன் கோவில் திருவிழா துவக்கம்
/
பத்ரகாளியம்மன் கோவில் திருவிழா துவக்கம்
ADDED : மார் 05, 2025 10:26 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை; உடுமலை சங்கிலி வீதியிலுள்ள, பத்ரகாளியம்மன் கோவில் திருவிழா துவங்கியது.
உடுமலை சங்கிலி வீதியிலுள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவில் ஆண்டு திருவிழா, நேற்று முன் தினம், சாமி நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது.
வரும், 9ம் தேதி கருப்பணசாமி பூஜை, 10ம் தேதி, தீர்த்தம் எடுத்து வருதல், 11ம் தேதி, திருவிழா கொடியேற்றம், காப்பு கட்டுதல், முளைப்பாலிகை இடுதல், கும்பம் எடுத்தல் நிகழ்ச்சிகள் நடக்கிறது. வரும், 15ம் தேதி, பூவோடு, 16ம் தேதி, மாவிளக்கு, 17ம் தேதி, அம்பாள் திருக்கல்யாண உற்சவம், 19ம் தேதி, மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சிகள் நடக்கிறது.