/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சிக்கண்ணா கல்லுாரியில் பாரதி கவிதாஞ்சலி பயிரலங்கு
/
சிக்கண்ணா கல்லுாரியில் பாரதி கவிதாஞ்சலி பயிரலங்கு
ADDED : செப் 12, 2024 12:27 AM

திருப்பூர்:
திருப்பூர், சிக்கண்ணா கல்லுாரி, தமிழ்த்துறை சார்பில், 'பாரதி கவிதாஞ்சலி' பயிலரங்கம் நடந்தது.
நிகழ்ச்சிக்கு, கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். தமிழ்த்துறை உதவி பேராசிரியர் மகேஸ்வரி வரவேற்றார். முனைவர் செல்வராஜூ, பாரதி பாடல் பாடி துவக்கி வைத்தார்.
எழுத்தாளர் முத்துபாரதி சிறப்பு விருந்தினராக பங்கேற்று, 'வல்லமை தாராயோ' எனும் தலைப்பில் பேசுகையில், ''ஒவ்வொரு சூழ்நிலையிலும் தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதிகாலை எழும் பறவையால் தொலை துாரம் செல்ல இயலும். அதேபோல், அதிகாலையில் எழும் பழக்கத்தை மாணவ, மாணவியர் வளர்த்துக் கொள்ள வேண்டும். பாடப்புத்தகங்களை தவிர, பிற அற நுால்களை கற்க வேண்டும்,'' என்றார்.
மாணவ, மாணவியர் கவியரங்கம் நடந்தது. துறை இணை பேராசிரியர் பாலசுப்ரமணியன், உதவி பேராசிரியர் செங்கமுத்து உள்ளிட்டோர் பேசினார். உதவி பேராசிரியர் ஜெரோம்பெர்னாட் நன்றி கூறினார். முருகானந்தவள்ளி, ரூபிணி கருத்தரங்கை ஒருங்கிணைத்தார்.