/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பைக் - கார் மோதி விபத்து; கல்லுாரி மாணவர் பலி
/
பைக் - கார் மோதி விபத்து; கல்லுாரி மாணவர் பலி
ADDED : ஆக 21, 2024 11:56 PM

உடுமலை: உடுமலை அருகே, பைக் மீது கார் மோதிய விபத்தில், கல்லுாரி மாணவர் பலியானார்.
உடுமலை - பொள்ளாச்சி ரோட்டிலுள்ள வித்யாசாகர் கல்லுாரியில், மூன்றாம் ஆண்டு மாணவர், பழநி பாப்பம்பட்டியை சேர்ந்த, பிரவீன், 20, ஆதித்யா, 20. இருவரும் கல்லுாரி முடித்து விட்டு, நேற்று மதியம், 2:30 மணியளவில் வெளியில் வந்தனர். சொந்த ஊருக்கு செல்ல கல்லுாரியிலிருந்து திரும்பிய நிலையில், மேற்கு நோக்கி வந்த கார் மோதியது. இதில், பலத்த காயமடைந்த இருவரையும் மீட்டு, உடுமலை அரசு மருத்துவமனை சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில், வரும் வழியில் பைக் ஓட்டி வந்த பிரவீன் இறந்தார். ஆதித்யா, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து உடுமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.