/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'ஹிந்தி திணிப்பு அல்ல' பா.ஜ., விழிப்புணர்வு
/
'ஹிந்தி திணிப்பு அல்ல' பா.ஜ., விழிப்புணர்வு
ADDED : மார் 08, 2025 11:20 PM

பல்லடம்,: திருப்பூர் வடக்கு மாவட்டம், பல்லடம் நகர பா.ஜ., சார்பில், புதிய கல்விக் கொள்கை குறித்த கையெழுத்து இயக்கம் நடந்தது.
நகரத் தலைவர் பன்னீர் செல்வகுமார் தலைமை வகித்தார். மாவட்டத் துணைத் தலைவர்கள் வினோத் வெங்கடேஷ், ஜோதிமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக, மும்மொழி கல்வி கொள்கை தொடர்பாக வீடு வீடாக சென்று, பொதுமக்களிடம் கையொப்பம் பெற்ற பா.ஜ.,,வினர், 'இன்றைய காலகட்டத்தில் மூன்றாவது மொழி கல்வி என்பது குழந்தைகளுக்கு மிகவும் அவசியம்.
மேலும், மூன்றாவது மொழியை கல்வித்துறையும், குழந்தைகளும், பெற்றோருமே முடிவு செய்து கொள்ளலாம். இதில், ஹிந்தி திணிப்பு என்பது எங்குமே இல்லை. சிலர் தேவையற்ற வதந்திகளை பரப்பி வருகின்றனர்,' என, விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மாவட்ட பொதுச் செயலாளர் கோகுல் கிருஷ்ணன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.