/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பா.ஜ., வேட்பாளர் முருகானந்தம் வாக்குறுதி
/
பா.ஜ., வேட்பாளர் முருகானந்தம் வாக்குறுதி
ADDED : ஏப் 15, 2024 12:33 AM

திருப்பூர்:திருப்பூர் பா.ஜ., வேட்பாளர் முருகானந்தம் நேற்று பவானி தொகுதி யில் சங்கமேஸ்வரர் கோவிலில் வழிபட்டு பிரசாரத்தை துவக்கினார். தொடர்ந்து, அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
திருவள்ளுவர் நகர், காமராஜர் ரோடு, அந்தியூர் - மேட்டூர் பிரிவு, குப்பிச்சிபாளையம், குறிச்சி, மாணிக்கம்பாளையம், கூடுதுறை பூக்கடை வீதி, குருவரெட்டியூர், நெரிஞ்சிப்பேட்டை, அம்மாபேட்டை உள்ளிட்ட பல் வேறு பகுதியில் வேட்பாளர் பிரசாரம் செய்தார். செல்லும் இடங்கள் எல்லாம் மக்கள் திரண்டு நின்று, வேட்பாளரை வரவேற்றனர்.
மக்கள் மத்தியில், ''பிரத மர் மோடியின் நேரடி வேட்பாளர், மக்கள் பிரச்னையை பிரதமரிடம் நேரடியாக கொண்டு சென்று தீர்வு காண்பேன்'' என்று மக்களிடம் உறுதியளித்து ஓட்டு சேகரித்தார்.
''பவானியில், தீரன் சின்னமலைக்கு தோள் கொடுத்த சுதந்திர போராட்ட வீரர் பொல்லாருக்கு சிலை நிறுவப்படும். கிராமங்கள் மற்றும் கிளைகள்தோறும் மினி பஸ் வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்கப்படும். கவுந்தப்பாடி நாட்டுச்சர்க்கரைக்கு புவிசார் குறியீடு பெற்று, நாட்டு சர்க்கரையின் வர்த்தகத்தை பெருக்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும்.
ஒவ்வொரு ஆண்டும் ஒதுக்கப்படும் நிதி குறித்து, மக்களுக்கு தெரியும் வகையில் வெள்ளை அறிக்கை வெளியிடுவேன். உங்கள் ஓட்டுகளை தாமரை சின்னத்துக்கு அளித்து, இந்த கூட்டணியை வெற்றி கூட்டணியாக மாற்ற வேண்டும்'' என்று பிரசாரம் செய்தார்.

