நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அனுப்பர்பாளையம்;அங்கேரிபாளையம் மண்டல பா.ஜ., சார்பில், புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான பயிலரங்கம் நடைபெற்றது. மண்டல தலைவர் ராம்குமார் தலைமை வகித்தார். மாவட்ட பொது செயலாளர் பாலசுப்ரமணியம், மாவட்ட துணை தலைவர்கள் பாலு, தங்கராஜ், பொது செயலாளர்கள் செல்வராஜ், கனகராஜ், குமார் உட்பட பலர் பங்கேற்று பேசினர்.
கூட்டத்தில், மாநில, மாவட்ட தலைமை வழிகாட்டுதலின்படி அடுத்த மாதம், 1ம் தேதி முதல் ஒவ்வொரு பூத்துக்கும், 200 புதிய உறுப்பினர்களை சேர்க்க முடிவு செய்யப்பட்டது.