/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சமக்கல்வி கொடி ஏற்றிய பா.ஜ.,வினர்
/
சமக்கல்வி கொடி ஏற்றிய பா.ஜ.,வினர்
ADDED : மார் 15, 2025 12:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ.,வின், அங்கேரிபாளையம் மண்டல் குழு சார்பில், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தங்கள் வீடுகளில் சமக்கல்வி கொடியை ஏற்றினர்.
அங்கேரிபாளையம் மண்டல தலைவர் சுதாமணி ஏற்பாட்டில், மாவட்ட தலைவர், சீனிவாசன் துவக்கி வைத்தார். தொடர்ந்து கையெழுத்து பிரசாரம் துவங்கியது.
'அங்கேரிபாளையம் மண்டலத்துக்கு உட்பட்ட, 65 கிளைகளிலும் பொதுமக்களிடம் இந்த பிரசாரத்தை கொண்டு சேர்க்கும் வகையில், கிளைத் தலைவர், பொதுமக்கள், மற்றும் நிர்வாகிகள் வீடுகளில் இந்த கொடி ஏற்றப்படும்,' என மாவட்ட தலைவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.