/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பிளேக் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
/
பிளேக் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
ADDED : செப் 06, 2024 12:12 AM

திருப்பூர்:திருப்பூர், 15 வேலம் பாளையத்தில் அமைந்துள்ள, பிளேக் மாரியம்மன், திருப்பூர் சுற்றுப்பகுதியில் பிரசித்தி பெற்றது. கோவில், திருப்பணி செய்து, நேற்று கும்பாபிேஷக விழா கோலாகலமாக நடந்தது.
கோவிலில், விநாயகர், பிளேக் மாரியம்மன், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், கன்னிமார், கருப்பராயன் சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
கடந்த 3ம் தேதி, மாலை, கரியகாளியம்மன் கோவிலில் இருந்து முளைப் பாலிகை, தீர்த்த குடம் எடுத்து வரப்பட்டது. விநாயகர் வழிபாட்டை தொடர்ந்து, மாலையில் முதல்கால யாகசாலை பூஜைகள் துவங்கின.
நான்கு கால யாகசாலை பூஜைகளை தொடர்ந்து, நேற்று கும்பாபிேஷக விழா, சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் ஒலிக்க, சிறப்பாக நடைபெற்றது. அதிகாலை, 4:00 மணிக்கு, புண்ணிய தீர்த்தத்துடன், கலசங்கள், யாகசாலையில் இருந்து புறப்பட்டன.
காலை, 7:45 மணிக்கு துவங்கி, 8:45 மணிக்குள், மூலவர் விமான கும்பாபிேஷகம், பிளேக் மாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்கள் மகா கும்பாபிேஷகம் நடந்தது.
கூனம்பட்டி திருமடம் நடராஜ சுவாமிகள் தலைமையில், சிவாச்சாரியார்கள், புனித தீர்த்தத்தால், கும்பாபிேஷகம் செய்தனர்.
தொடர்ந்து, மூலாலய மூர்த்திகளுக்கும் கும்பாபிேஷகம் நடந்தது. தசதரிசனம், தசதானம், மகா அபிேஷகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை தொடர்ந்து பிரசாதம் வழங்கப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
கூனம்பட்டி திருமடம், கிரிவாச சிவம் தலைமையிலான குழுவினர், சர்வசாதக பணிகளை மேற்கொண்டனர். விழா ஏற்பாடுகளை, திருப்பணி கமிட்டியினர், ஊர் பொதுமக்கள், பிளேக் மாரியம்மன் திருக்கோவில் அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.
கும்பாபிேஷகத்தை தொடர்ந்து, மண்டலாபிேஷக பூஜைகள், காலை, 11:00 முதல், மதியம் 1:00 மணி வரை, 24 நாட்களுக்கு நடக்குமென, அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.