/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தடுப்பு சுவர் இடிந்து வடிகால் அடைப்பு
/
தடுப்பு சுவர் இடிந்து வடிகால் அடைப்பு
ADDED : மே 17, 2024 12:24 AM

திருப்பூர்;திருப்பூர், ஊத்துக்குளி ரோட்டில் தனலட்சுமி மில் அருகே ஒற்றைக் கண் பாலம் உள்ளது. ரயில் பாதையின் கீழ் மழை நீர் செல்லும் வகையில் அமைந்துள்ள இந்த பாலம் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன.
மழைக்காலத்தில், மழை நீர் செல்ல நெடுஞ்சாலைத் துறை சார்பில் மழை நீர் வடிகால் அமைக்கப்பட்டு தற்போது பயன்பாட்டில் உள்ளது. வடிகாலை ஒட்டி அமைந்துள்ள தடுப்பு சுவர் இரு இடங்களில் சேதமாகி உடைந்துகிடக்கிறது. சரிந்த கற்கள், வடிகாலுக்குள் விழுந்ததால், மழை மற்றும் கழிவு நீர் செல்வதில் பெரும் சிரமம் நிலவுகிறது.
இரு நாள் முன் மழை பெய்த போது, வடிகாலில் முழுமையாக நீர் செல்ல வழியின்றி, பாலத்தில் கீழ் பெருமளவு மழை நீரும், கழிவு நீரும் பெருக்கெடுத்து ஓடியது. மழை நாட்களில் இந்த பாலத்தின் கீழ் வாகனங்கள் செல்வதில் பெரும் சிரமும் நிலவுகிறது.
மேலும் இந்த தடுப்பு சுவர் இரு இடங்களில் சேதமடைந்த நிலையில் பாதிக்கும் மேல் சரிவாக ஒரு புறத்தில் சாய்ந்த நிலையில், எப்போது வேண்டு மானாலும் முழுவதும் சரிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.

