/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரத்த தான முகாம்கள் 68 யூனிட் சேகரிப்பு
/
ரத்த தான முகாம்கள் 68 யூனிட் சேகரிப்பு
ADDED : ஜூலை 14, 2024 11:16 PM

அனுப்பர்பாளையம்;திருப்பூர், முயற்சி மக்கள் அமைப்பு மற்றும் சென்ட்ரல் லயன்ஸ் கிளப் சார்பில், ரத்ததான முகாம் காந்தி நகரில் நடந்தது. திருப்பூர் அரசு மருத்துவமனை மருத்துவ குழுவினர் 20 யூனிட் ரத்தம் சேகரித்தனர். 'முயற்சி' அமைப்பின் தலைவர் சிதம்பரம், சென்ட்ரல் லயன்ஸ் கிளப் தலைவர் சண்முகம், செயலாளர்கள் ராமசந்திரன், அருண், பிரபு பொருளாளர் தாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வீரபாண்டி பொது சுத்திகரிப்பு நிலையம் கருப்பகவுண்டம்பாளையம் அரசு பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகம், முன்னாள் மாணவர் அமைப்பு, நடைபயிற்சி நண்பர்கள் ஆகியோர் சார்பில், வீரபாண்டியில் ரத்ததான முகாம் நடந்தது. தாராபுரம் அரசு மருத்துவமனை மருத்துவ குழுவினர் 48 யூனிட் ரத்தம் சேகரித்தனர். வீரபாண்டி பொது சுத்திகரிப்பு நிலைய தலைவர் காந்தி ராஜன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சுப்பிரமணியம், கவுன்சிலர் அருணாசலம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
........