/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தாய், தோழியுடன் வாலிபர் கைது; காட்டிக்கொடுத்த 'ரத்தக்கறை'
/
தாய், தோழியுடன் வாலிபர் கைது; காட்டிக்கொடுத்த 'ரத்தக்கறை'
தாய், தோழியுடன் வாலிபர் கைது; காட்டிக்கொடுத்த 'ரத்தக்கறை'
தாய், தோழியுடன் வாலிபர் கைது; காட்டிக்கொடுத்த 'ரத்தக்கறை'
ADDED : ஜூன் 02, 2024 01:33 AM

பல்லடம்:பல்லடம் அருகே, தாய் மற்றும் தோழியுடன் இணைந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட முன்னாள் குற்றவாளியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரத்தை சேர்ந்த முகமது ரபி மகன் ரஷீத், 21. இவரது தாய் ரபிதா 38. ரபிதா, திருப்பூரில் உள்ள தனது கணவரை பார்க்க வேண்டி, சொந்த ஊரில் இருந்து திருப்பூர், சின்னாண்டிபாளையம் வந்தார்.
வேறு ஒரு திருட்டு வழக்கில் கைதாகி சிறையில் இருந்த ரஷீத், ஜாமீனில் வெளியே வந்து, சேலத்தில் இருந்து தனது 15 வயது தோழியை அழைத்துக் கொண்டு, திருப்பூர் சின்னாண்டிபாளையம் வந்தார். வரும்போதே, சங்ககிரியில் ஒரு டூவீலரை திருடி எடுத்து வந்தார். திருப்பூர் வந்ததும், மூன்று பேரும் சேர்ந்து மற்றொரு திருட்டு சம்பவத்துக்கு திட்டமிட்டனர்.
கடந்த மே 23ம் தேதி, சென்னிமலை பாளையத்தை சேர்ந்த பிரேம்குமார், 27, குன்னாங்கல்பாளையத்தை சேர்ந்த நாச்சாள், 75 ஆகியோர் வீடுகளில் புகுந்து பீரோவை உடைத்து, 40 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் நான்கரை சவரன் தாலிக்கொடி ஆகியவற்றை திருடி சென்றனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த பல்லடம் போலீசார், சின்னக்கரை செக்போஸ்ட் பகுதியில் மூவரையும் கைது செய்தனர். 15 வயதான ரஷீத்தின் தோழி, சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
போலீசார் கூறுகையில், 'ரஷீத் மீது, திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், திருப்பூர், ஊத்துக்குளி உள்ளிட்ட பல்வேறு ஸ்டேஷன்களில், 15க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளன. ரஷீத், வீடுகளில் திருடி எடுத்து வரும் நகைகளை, இவரது தாய் ரபிதா, விற்பனை செய்து பணமாக்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
சென்னிமலைபாளையத்தில் நடந்த திருட்டு சம்பவத்தின் போது, பீரோவின் கண்ணாடி குத்தியதில், ரஷீத்தின் கைகளில் இருந்து ரத்தம் சிந்தியுள்ளது. இது குற்றவாளியை கைது செய்ய பெரிதும் உதவியது என்றனர்.