/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சி.ஏ., மாணவர்களுக்கு'போதி' கருத்தரங்கம்
/
சி.ஏ., மாணவர்களுக்கு'போதி' கருத்தரங்கம்
ADDED : ஜூன் 29, 2024 01:34 AM

திருப்பூர்;திருப்பூர் கிளை இந்திய பட்டய கணக்காளர் சங்கம் சார்பில், சி.ஏ., பயிலும் மாணவர்களுக்கான மாநில அளவிலான, 2 நாள் கருத்தரங்கம் 'போதி' என்ற தலைப்பில், ராயபுரம் சங்கத்தில் நேற்று துவங்கியது. தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார். செயலாளர் தருண், 'சிகாசா' தலைவர் சரவண ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைப்பாளர் சிவகுமார் வரவேற்றார்.
மேயர் தினேஷ்குமார், இந்திய பட்டய கணக்காளர் சங்க முன்னாள் தலைவர் ஜலபதி ஆகியோர் துவக்கிவைத்தனர்.
'போதி' என்ற தலைப்பிலான கருத்தரங்கில், தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும், 'சிஏ' பயிலும் மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். நேற்று நடந்த முதல் நாள் கருத்தரங்கில் பல்வேறு தலைப்புகளின் கீழ் முன்னணி ஆடிட்டர்கள், துறை வல்லுனர்கள் பேசினர். இன்று இரண்டாம் நாள் மாநாட்டிலும் பல்வேறு வல்லுனர்கள் பேசவுள்ளனர்.