
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உலக புத்தக தினத்தையொட்டி, திருப்பூர் பின்னல் புத்தகாலயம் சார்பில், நேற்று சிறப்பு புத்தக கண்காட்சி மற்றும் விற்பனை நடந்தது.
ராயபுரம் ரவுண்டானா பகுதியில் நடந்த இக்கண்காட்சியை எம்.எல்.ஏ., செல்வராஜ் துவக்கி வைத்தார்.முற்போக்கு எழுத்தாளர் சங்க செயலாளர் குமார் தலைமை வகித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் கவுரி சங்கர் வரவேற்றார். முதல் விற்பனையை மேயர் தினேஷ்குமார் பெற்றுக் கொண்டார். துணை மேயர் பாலசுப்ரமணியம், நொய்யல் பண்பாட்டு அமைப்பினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.