ADDED : ஆக 06, 2026 08:10 PM
அ நிறம் | அளவு
திருப்பூர், ஆக. 7–
திருப்பூர் சமரச சன்மார்க்க சத்திய சங்கம் ஞானசபையில் மங்கை பாரதி பதிப்பகம் தயாரித்த தகவல் தொகுப்பு – 2026 சிற்றிதழ் நுால் வெளியீட்டு விழா நடந்தது.
கந்தன் கார்ட்ஸ் நிறுவனர் கந்தசுவாமி பத்மாவதி வெளியிட, சங்க செயலாளர் ஜீவானந்தம் பெற்றுக்கொண்டார். இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு – 2027 தரவுகள், ரூபாய் நோட்டில் இடம் பெற்றுள்ள வரலாற்று நினைவு சின்னங்களின் விவரங்கள், உலகளவில் மிகப்பெரிய எகிப்து அருங்காட்சியகம் பற்றிய குறிப்புகள், சுந்தரர் பாடிய அவிநாசி குறித்த தேவாரப்பாடல்கள், கங்கை கொண்ட சோழபுரம் கோவில் குறித்த தகவல்கள் நுாலில் இடம் பெற்றிருந்தது. தொடர்ந்து, திருஅருட்பா அகவல் பாராயணம் நடந்தது. ஒளி வழிபாட்டை தொடர்ந்து, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
