/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
எறிபந்து விளையாட்டு எஸ்.கே.எல்., அபாரம்
/
எறிபந்து விளையாட்டு எஸ்.கே.எல்., அபாரம்
ADDED : ஆக 29, 2024 02:32 AM

அவிநாசி : அவிநாசி அருகே பழங்கரை ஊராட்சி, பச்சாம்பாளையத்திலுள்ள எஸ்.கே.எல்., பப்ளிக் மெட்ரிக் பள்ளியில், அவிநாசி குறுமைய விளையாட்டுப் போட்டிகள், நடைபெற்று வருகிறது.
நேற்று 14, 17, 19 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் எறிபந்து போட்டிகள் நடைபெற்றன. 14 வயது பிரிவில், எம்.எஸ்., வித்யாலயா, 22 புள்ளிகளுடன் முதல் இடத்தையும், ஊத்துக்குளி கொங்கு மெட்ரிக் பள்ளி, 20 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தையும் பெற்றன.
பதினேழு வயது பிரிவில், திருப்பூர் பப்ளிக் பள்ளி, 21 புள்ளிகள் பெற்று முதல் இடமும், எம்.எஸ்., வித்யாலயாஏழு புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தையும் பெற்றனர். 19 வயது பிரிவில், 21 புள்ளிகளுடன் எஸ்.கே.எல்., பப்ளிக் மெட்ரிக் பள்ளி முதல் இடத்தையும், 6 புள்ளிகள் பெற்று பாண்டியன் நகர் சாரதா மெட்ரிக் பள்ளி இரண்டாம் இடத்தையும் பெற்றன.