ADDED : செப் 14, 2024 10:58 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொங்கலுார்: பொங்கலுார், காட்டூர் - அரிஜன காலனியை சேர்ந்தவர் செல்வம், 40; கூலி தொழிலாளி. இவரது மகன் விஷ்ணு மூர்த்தி,4. அப்பகுதியில் செல்லும் பி.ஏ.பி., வாய்க்காலில் சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார். திடீரென தண்ணீரில் சிறுவன் இழுத்துச் செல்லப்பட்டான்.
உடன் சென்ற சிறுவர்கள் பெற்றோரிடம் தெரிவித்தனர். 200 மீ., தொலைவில் தண்ணீரில் மிதந்து சென்ற சிறுவனை மீட்டு பொங்கலுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். காமநாயக்கன்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.