/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பாலம் கட்டுமான பணிகள் விரைந்து முடிக்க எதிர்பார்ப்பு
/
பாலம் கட்டுமான பணிகள் விரைந்து முடிக்க எதிர்பார்ப்பு
பாலம் கட்டுமான பணிகள் விரைந்து முடிக்க எதிர்பார்ப்பு
பாலம் கட்டுமான பணிகள் விரைந்து முடிக்க எதிர்பார்ப்பு
ADDED : மே 15, 2024 12:34 AM

பல்லடம்;பல்லடத்தில் பாலம் கட்டுமான பணியை விரைந்து முடிக்க வேண் டும் என, நெடுஞ்சாலைத்துறை அதிகாரியிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
பல்லடம் - பொள்ளாச்சி ரோட்டில் உள்ள தரைமட்ட பாலம், 1.40 கோடி ரூபாய் மதிப்பில் புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது. இதனால், பொள்ளாச்சி ரோட்டில், வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு, மாற்று வழி மூலம் வாகனங்கள் சென்று வருகின்றன.
போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதால், பாலம் கட்டுமான பணியை விரைந்து முடிக்க வேண்டும் என, பொதுமக்கள் சார்பில், பல்லடம் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:
பொள்ளாச்சி ரோடு பாலம் கட்டுமான பணியால் நகரப் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. ஏற்கனவே, பல்லடத்துக்கு புறவழிச் சாலை உள்ளிட்ட மாற்று வழித்தடம் இல்லாததால், வாகனங்கள் நெரிசலில் சிக்கி தவித்து வருகின்றன.
இதில், பொள்ளாச்சி ரோடு பணி காரணமாக, கூடுதல் நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். இதுதவிர, ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் பாலம் கட்டுமான பணி நடப்பதாக கூறப்படுகிறது.
எனவே, உரிய அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றி பாலம் கட்டுமான பணியை விரைந்து மேற்கொள்ள வேண்டும். பணிகள் முடியும் வரை பாதசாரிகள் செல்வதற்கான தற்காலிக வழித்தடம் ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மனுவை பெற்றுக் கொண்ட நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் தனலட்சுமி கூறுகையில், ''போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு பாலம் கட்டுமான பணியை விரைந்து தான் செயல்படுத்தி வருகிறோம். ஆக்கிரமிப்பு என்பது தேசிய நெடுஞ்சாலையின் கட்டுப்பாட்டில் உள்ளது,'' என்றார்.

