/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குமரன் சாலையில் உடைந்த குழாய்கள்
/
குமரன் சாலையில் உடைந்த குழாய்கள்
ADDED : ஜூன் 10, 2024 02:17 AM

தண்ணீர் வீண்
போக்குவரத்து நெரிசல் நிறைந்த குமரன் ரோட்டில், அவ்வப்போது குழாய் உடைந்து தண்ணீர் வீணாவது தொடர் கதையாக உள்ளது. குழாய்களை சரிசெய்ய வேண்டும்.
- பரமசிவம், குமரன் ரோடு. (படம் உண்டு)
சாலை சேதம்
திருப்பூர், 15 வேலம்பாளையம், பிளேக் மாரியம்மன் கோவில் நான்கு வழி சாலை சந்திப்பில், சாலை சேதமடைந்து குழியாகியுள்ளது.
- தாமோதரன், 15 வேலம்பாளையம். (படம் உண்டு)
வெளிச்சம் இல்லை
திருப்பூர், மங்கலம் ரோடு, ரோஸ் கார்டனில் தெருவிளக்கு ஒருபுறம் மட்டுமே வெளிச்சம் தரும் வகையில் உள்ளது. பரவலாக வெளிச்சம் பரவும் வகையில், தெருவிளக்கை சரியாக பொருத்த வேண்டும்.
- மகேஷ்வரி, ரோஸ் கார்டன். (படம் உண்டு)
கும்மிருட்டு
திருப்பூர், கே.பி.என்., காலனி, ஓம் சக்தி நகர் இரண்டாவது வீதியில், இருபது நாட்களாக தெருவிளக்கு எரிவதில்லை. கும்மிருட்டாக உள்ளது.
- சுப்பு, ஓம் சக்தி நகர். (படம் உண்டு)
பல்லாங்குழி
திருப்பூர், தாராபுரம் ரோடு, வேலவன் பள்ளி வீதி குண்டும் குழியுமாக உள்ளது. வாகன ஓட்டிகள் சென்று வர சிரமப்படுகின்றனர். ரோடு போட வேண்டும்.
- யோகவேல், தாராபுரம் ரோடு. (படம் உண்டு)
சாலையில் கழிவுநீர்
திருப்பூர், பொம்மநாயக்கன்பாளையம், பத்திரப்பதிவு அலுவலகம் செல்லும் சாலையில் பாதாள சாக்கடை மூடி உடைந்து கழிவுநீர் ரோட்டில் வெளியேறுவதால், துர்நாற்றம் வீசுகிறது.
- முருகேசன், பொம்மநாயக்கன்பாளையம். (படம் உண்டு)
ரியாக் ஷன்
தெருவிளக்கு 'பளிச்'
திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, எஸ்.ஆர்.சி., மில் உயர்மட்ட பாலத்தில் தெருவிளக்கு எரிவதில்லை. இருள்சூழ்ந்து காணப்படுவதாக 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. தெருவிளக்குகள் சரிசெய்யப்பட்டு, தற்போது பளிச்சிடுகின்றன.
- நடராஜன், தியாகி குமரன் காலனி. (படம் உண்டு)
லாரி அகற்றம்
திருப்பூர் - வஞ்சிபாளையம் ரோட்டில், விபத்துக்குள்ளாகி எரிந்த நிலையில், லாரி நின்று கொண்டே இருந்தது. 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியான பின், லாரி அப்பகுதியில் இருந்து அகற்றப்பட்டு விட்டது.
- விஜயன் அண்ணாமலை, கணியாம்பூண்டி. (படம் உண்டு)
உடைப்பு சீரானது
திருப்பூர், 30வது வார்டு, லட்சுமி நகரில் குழாய் உடைந்து தண்ணீர் வீணானது குறித்து, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. குழாய் உடைப்பு சரிசெய்யும் பணி துவங்கியது.
- ஸ்ரீவிஷ்ணு, லட்சுமி நகர். (படம் உண்டு)