/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
புதர் மண்டிய மாநகராட்சி பூங்கா; 'குடி'மகன்கள் ஆக்கிரமிப்பு
/
புதர் மண்டிய மாநகராட்சி பூங்கா; 'குடி'மகன்கள் ஆக்கிரமிப்பு
புதர் மண்டிய மாநகராட்சி பூங்கா; 'குடி'மகன்கள் ஆக்கிரமிப்பு
புதர் மண்டிய மாநகராட்சி பூங்கா; 'குடி'மகன்கள் ஆக்கிரமிப்பு
ADDED : ஆக 04, 2024 11:17 PM

அனுப்பர்பாளையம்: -திருப்பூர், போயம்பாளையம் நஞ்சப்பா நகரில் ஒரு கோடியே ஏழு லட்சத்து, 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில், மாநகராட்சி பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
பூங்காவில், காலை - மாலை நடைபயிற்சி மேற்கொள்ள நடைபாதை, பூங்காவிற்கு வருபவர்கள் அமர இருக்கைகள், செயற்கை நீரூற்று, புல் தரை, குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் அமைக்கப்பட்டது.
கடந்த 2018ம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்த பூங்கா அதிகாரிகள் கண்டு கொள்ளா போக்கால், மக்கள் பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
பூங்காவில் தற்போது முட்புதர்கள் மண்டி நடைபாதையை ஆக்கிரமித்து உள்ளன. கழிப்பறையைப் பயன்படுத்த முடியாது. செயற்கை நீரூற்று உபகரணங்கள், இருக்கைகள் உடைந்துள்ளன.
பொதுமக்கள் கூறுகையில், ''இப்பகுதியில் பொழுது போக்க பூங்கா மட்டுமே உள்ளது. இருக்கைகளை 'குடி'மகன்கள் ஆக்கிரமித்து கொள்கின்றனர்.
முட்புதர்கள் மண்டி உள்ளதால் விஷ ஜந்துகள் இருக்குமோ என்பதால் உள்ளே செல்ல அச்சமாக உள்ளது.
புல் தரை காய்ந்துபோய் உள்ளது. பூங்காவை பராமரித்து மக்கள் பயன்பாட்டுக்குகொண்டுவர மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றனர்.