/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'பரபர' விற்பனை; மீன்கள் தீர்ந்தன ' விறுவிறு ' விற்பனை; மீன்கள் தீர்ந்தன

ADDED : ஏப் 22, 2024 12:33 AM

திருப்பூர்:மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு நேற்று அனைத்து பகுதியிலும் இறைச்சிக்கடைகள் செயல்படக் கூடாது என அறிவிக்கப்பட்டு, இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
திருப்பூரில் மங்கலம் ரோடு, பி.என்., ரோடு, கொங்கு மெயின் ரோடு, போயம்பாளையம், மும்மூர்த்தி நகர், தாராபுரம் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் மூடப்பட்ட இறைச்சி கடைகளில் உட்புறமாக வைத்து ரகசியமாக இறைச்சி விற்பனை நடந்தது.
மாநகராட்சி முதல் மண்டல சுகாதார அலுவலர் ராஜேந்திரன், தலைமையில், சுகாதார பணியாளர் நேற்று காந்திநகர், அங்கேரி பாளையம், ஆத்துபாளையம், 15 வேலம்பாளையம் ஆகிய பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.
ஏழு கடைகளில் ஆடு மற்றும் கோழி இறைச்சி விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
அங்கிருந்து, 18 கிலோ ஆட்டு இறைச்சி, 20 கிலோ கோழி இறைச்சி ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மாநகராட்சி பகுதியில் பல்வேறு கடைகளிலிருந்தும் 100 கிலோ எடையிலான இறைச்சிகள் பறிமுதல் செய்து, குப்பை வாகனத்தில் ஏற்றிச் செல்லப்பட்டது. குப்பைக் கிடங்கில் இறைச்சிகளைக் கொட்டி, பினாயில் ஊற்றி அழிக்கப்பட்டது.
திருப்பூர், ஏப். 22-
திருப்பூர் மீன் மார்க்கெட்டுக்கு நேற்று, 60 டன் மீன்கள் வந்தன. வழக்கமாக, இறைச்சிக்கடைகளில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை, 5:00 மணிக்கே விற்பனை துவங்கும். மட்டன், சிக்கன் விற்பனை, 10:00 மணி வரை சுறுசுறுப்பாக நடக்கும். நேற்று, மகாவீர் ஜெயந்தியை என்பதால், இறைச்சி கடைகள் இயங்க மாவட்ட நிர்வாகம் தடைவிதித்திருந்தது. இதனால், மீன் மார்க்கெட்டில் காலை முதலே கூட்டம் அதிகரித்தது.
நேற்று, மத்தி, கிலோ 200 ரூபாய், படையப்பா, 350, கடல் பாறை, 550, டேம் பாறை, 150, அயிலை, 240, வஞ்சிரம், 750, நண்டு, 550, சங்கரா, 350, ஊழி, 400, விளாமீன், 550 ரூபாய்க்கு விற்றது. இறைச்சி கடை இல்லாத பகுதியில், விற்பனை செய்ய மொத்த மீன் வியாபாரிகள் பலர் மீன்களை அதிகளவில் வாங்கிச் சென்றனர்.
கடந்த இரு வாரங்களாக அமாவாசை, சித்திரை பிறப்பு, தமிழ்ப்புத்தாண்டு காரணமாக மீன் விற்பனை மார்க்கெட்டில் மந்தமாக இருந்தது. நேற்று நாள் முழுதும் மீன் விற்பனை சுறுசுறுப்பாக இருந்ததால், 50 டன்னுக்கும் அதிகமாக மீன் விற்றதால், மீன் வியாபாரிகள் நிம்மதி அடைந்தனர்.
மீன் வியாபாரிகள் கூறுகையில்,' மீன்பிடி தடைக்காலம் துவங்கிய முதல் வாரம் என்பதால், மீன் வரத்து இயல்பாக இருந்தது. வரத்து கை கொடுத்த நிலையில், விற்பனை ஓரளவு இருந்ததால், இந்த வாரம் நஷ்டம் இல்லை,' என்றனர்.
---
'ரகசிய' விற்பனை; இறைச்சி பறிமுதல்
திருப்பூர், ஏப். 22-
மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு நேற்று அனைத்து பகுதியிலும் இறைச்சிக்கடைகள் செயல்படக் கூடாது என அறிவிக்கப்பட்டு, இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
திருப்பூரில் மங்கலம் ரோடு, பி.என்., ரோடு, கொங்கு மெயின் ரோடு, போயம்பாளையம், மும்மூர்த்தி நகர், தாராபுரம் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் மூடப்பட்ட இறைச்சி கடைகளில் உட்புறமாக வைத்து ரகசியமாக இறைச்சி விற்பனை நடந்தது.
மாநகராட்சி முதல் மண்டல சுகாதார அலுவலர் ராஜேந்திரன், தலைமையில், சுகாதார பணியாளர் நேற்று காந்திநகர், அங்கேரி பாளையம், ஆத்துபாளையம், 15 வேலம்பாளையம் ஆகிய பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.
ஏழு கடைகளில் ஆடு மற்றும் கோழி இறைச்சி விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
அங்கிருந்து, 18 கிலோ ஆட்டு இறைச்சி, 20 கிலோ கோழி இறைச்சி ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மாநகராட்சி பகுதியில் பல்வேறு கடைகளிலிருந்தும் 100 கிலோ எடையிலான இறைச்சிகள் பறிமுதல் செய்து, குப்பை வாகனத்தில் ஏற்றிச் செல்லப்பட்டது.குப்பைக் கிடங்கில் இறைச்சிகளைக் கொட்டி, பினாயில் ஊற்றி அழிக்கப்பட்டது.