/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குண்டும், குழியுமாக நெடுஞ்சாலை நகரில் தடுமாறும் வாகனங்கள்
/
குண்டும், குழியுமாக நெடுஞ்சாலை நகரில் தடுமாறும் வாகனங்கள்
குண்டும், குழியுமாக நெடுஞ்சாலை நகரில் தடுமாறும் வாகனங்கள்
குண்டும், குழியுமாக நெடுஞ்சாலை நகரில் தடுமாறும் வாகனங்கள்
ADDED : ஆக 20, 2024 10:17 PM
உடுமலை : நகரப்பகுதியில், தேசிய நெடுஞ்சாலை குண்டும், குழியுமாக மாறியுள்ளதால், வாகன ஓட்டுநர்கள் மழைக்காலங்களில், விபத்துக்குள்ளாவது அதிகரித்துள்ளது.
கோவை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், மடத்துக்குளம் அமராவதி ஆற்றுப்பாலம் முதல், மாவட்ட எல்லையான கோமங்கலம் வரையுள்ள பகுதி, உடுமலை கோட்ட பராமரிப்பில், உள்ளது.
இந்த ரோடு, நீண்ட காலமாக முழுமையாக புதுப்பிக்கப்படாமல் உள்ளது. அவ்வப்போது, பெயரளவுக்கு 'பேட்ஜ் ஓர்க்' மட்டும் மேற்கொள்கின்றனர்.
குறிப்பாக, உடுமலை நகரில், பஸ் ஸ்டாண்ட் முதல் தீயணைப்பு நிலையம் வரை, ஆங்காங்கே குழிகள் ஏற்பட்டு, நீண்ட காலமாகிறது.
அடிப்படை சீரமைப்பு மேற்கொள்ளாத நிலையில், சமீபத்திய மழைக்கு அக்குழிகள் அனைத்தும், பள்ளங்களாக மாறி, தண்ணீர் தேங்கி, இரு சக்கர வாகன ஓட்டுநர்கள் தடுமாறி வருகின்றனர்.
இதே போல், காந்திநகர் சந்திப்பு, ஐஸ்வர்யா நகர் ரோடு சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில், குழிகள் நீண்ட காலமாக சீரமைக்கப்படாமல் உள்ளது. நடைமேம்பாலம் அருகே, குடிநீர் குழாய் உடைப்பு காரணமாக ஏற்பட்ட பள்ளம் முறையாக சீரமைக்கப்படவில்லை.
இவ்வாறு, தேசிய நெடுஞ்சாலை முழுவதும் விபத்து பகுதியாக மாறி வருகிறது. மழைக்காலம் துவங்கியுள்ள நிலையில், நெடுஞ்சாலை முழுவதும், பள்ளமாக மாறி, விபத்துகள் ஏற்பட்டு வருகிறது.
உடனடி தீர்வாக பராமரிப்பு பணிகளை மட்டுமாவது தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் மேற்கொள்ள வேண்டும். ரோட்டில் தண்ணீர் தேங்காதவாறு, வடிகால்களை துார்வாருவதும் அவசியமாகும்.

