/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வீட்டில் திருட்டு; போலீஸ் குழப்பம்
/
வீட்டில் திருட்டு; போலீஸ் குழப்பம்
ADDED : ஆக 08, 2024 12:23 AM

பல்லடம் : பல்லடம், காளிவேலம்பட்டியை சேர்ந்தவர் சேகர், 55. மனைவி, மகளுடன் வசிக்கிறார். வீட்டுடன் மளிகை கடை நடத்தி வந்தார்.
கடந்த வாரம், மளிகைக்கடையில் பதுக்கி வைத்திருந்த குட்கா பொருட்களை பறிமுதல் செய்த பல்லடம் போலீசார், சேகரை சிறையில் அடைத்தனர். உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கடைக்கு பூட்டு போட்டனர். சேகரின் மனைவியும், மகனும், வீட்டை பூட்டி விட்டு உறவினர் வீட்டுக்கு சென்றனர். நேற்று காலை வீடு திரும்பிய இருவரும், வீட்டின் கேட், கதவு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
வீட்டில் எவ்வளவு நகை - பணம் இருந்தது என்ற விவரம் சேகர் மனைவிக்குத் தெரியவில்லை. சிறையில் உள்ள சேகரை தொடர்பு கொண்டு போலீசார் கேட்டதற்கு, அவருக்கும் சரிவர தெரியவில்லை.
இதனால் போலீசாருக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது. கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, தடயங்கள் சேகரிக்கப்பட்டன. கிராம மக்கள் கூடும் ஊரின் மைய பகுதியில் நடந்துள்ள இத்திருட்டு சம்பவம், கிராம மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.