/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பராமரிப்பின்றி வீணாகும் பஸ் ஸ்டாப் நிழற்கூரை
/
பராமரிப்பின்றி வீணாகும் பஸ் ஸ்டாப் நிழற்கூரை
ADDED : பிப் 27, 2025 08:46 PM
உடுமலை, ; உடுமலை தளி ரோடு, எலையமுத்துார் பிரிவில் அமைக்கப்பட்டுள்ள பஸ் ஸ்டாப் நிழற்கூரை, பராமரிப்பு இல்லாமலும், பயன்பாடு இல்லாமலும் வீணாகி வருகிறது.
உடுமலை தளி ரோட்டில், அரசுக்கல்லுாரி, கோட்டாட்சியர் அலுவலகம், அரசு ஐ.டி.ஐ., வட்டார போக்குவரத்து அலுவலகம், அரசு மாணவர்கள் விடுதி என ஏராளமான அரசு அலுவலகங்களும், குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள் உள்ளன.
இந்த ரோட்டில், உடுமலை நோக்கி வரும் பஸ்கள் நின்று செல்லும் வகையில், பஸ் ஸ்டாப் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பஸ் ஸ்டாப் நிழற்கூரை, முறையாக பராமரிக்கப்படாததால், சிதிலமடைந்தும், கழிவுகள் தேங்கியும் பயன்படுத்த முடியாமல் வீணாக உள்ளது.
இதனால், மாணவர்கள், பொதுமக்கள் ரோட்டிலேயே காத்திருக்கும் நிலை உள்ளது. அதே போல், தெற்கு பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள், மூன்று ரோடு சந்திப்பு பகுதியிலேயே நிறுத்தப்படுவதோடு, மக்களும் ரோட்டில் காத்திருந்து பஸ் ஏற வேண்டிய நிலை உள்ளது.
இதனால், போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. எனவே, இப்பகுதியில் அரசு துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, போக்குவரத்து பாதிப்பு இல்லாத வகையில் பஸ் ஸ்டாப்களை மாற்றி அமைக்கவும், பயணியர் காத்திருக்கும் வகையில் நிழற்கூரை வசதிகள் ஏற்படுத்தவும் வேண்டும்.