/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சொட்டு நீரில் முட்டைகோஸ் சாகுபடி; விவசாயிகள் முயற்சி
/
சொட்டு நீரில் முட்டைகோஸ் சாகுபடி; விவசாயிகள் முயற்சி
சொட்டு நீரில் முட்டைகோஸ் சாகுபடி; விவசாயிகள் முயற்சி
சொட்டு நீரில் முட்டைகோஸ் சாகுபடி; விவசாயிகள் முயற்சி
ADDED : ஜூலை 01, 2024 02:31 AM
உடுமலை;உடுமலை உள்ளிட்ட சந்தைகளுக்கு, மலைப்பகுதியில், இருந்து விளைவிக்கப்பட்டு, விற்பனைக்காக முட்டைகோஸ், முன் கொண்டு வரப்பட்டது. சீசன் சமயங்களில், தேவை அதிகரித்து, முட்டைகோஸ் விலை அதிகரிப்பது வழக்கம்.
இந்நிலையில், சொட்டு நீர் பாசனம் வாயிலாக, முட்டைகோஸ் சாகுபடியையும், உடுமலை பகுதி விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
ஆலாம்பாளையம், குட்டியகவுண்டனுார், ஆண்டியகவுண்டனுார், கிளுவங்காட்டூர் உள்ளிட்ட பகுதிகளில், இரு சீசன்களாக, முட்டைகோஸ் சாகுபடி செய்கின்றனர்.
விவசாயிகள் கூறியதாவது: தனியார் நாற்று பண்ணைகளில், முட்டைகோஸ் நாற்றுகளை விலைக்கு வாங்கி, நடவு செய்கிறோம். ஏக்கருக்கு, 45 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது; 13 ஆயிரம் கிலோ வரை, மகசூல் எதிர்பார்க்கிறோம். முறையாக பராமரிப்பு செய்தால், 100 நாட்களில், அறுவடை செய்யலாம்.
பிற மாவட்ட வியாபாரிகள் நேரடியாகவும் வந்து கொள்முதல் செய்து செல்கின்றனர். நோய்த்தாக்குதலை கட்டுப்படுத்த அதிக செலவிட வேண்டியுள்ளது. இவ்வாறு, தெரிவித்தனர்.