ADDED : ஏப் 12, 2024 01:22 AM

அ நிறம் | அளவு
திருப்பூர்;திருப்பூர் - ஊத்துக்குளி ரோடு, கொடிகம்பம், புதுராமகிருஷ்ணாபுரம், கொங்கு மெயின் ரோடு எக்ஸ்டன்சன் பகுதிகளை இணைக்க, இரண்டாவது ரயில்வே கேட் உள்ளது. நேற்று மதியம், கேட் - சிக்னல் இடையேயான கேபிள் இணைப்பு அறுந்தது; வேறு ஒயர் மாற்ற வேண்டியிருந்ததால், கேட் பூட்டப்பட்டது.
கோவை - ஈரோடு, ஈரோடு - கோவை வழித்தடத்தை கடந்து செல்லும் ரயில்களுக்கு 'கிரீன் சிக்னல்' வழங்கப்பட்டது. கேட் மூடப்பட்டதால், சாலை மார்க்கமாக வரும் வாகனங்கள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டன. பொறியியல் பிரிவில் இருந்து மாற்று ஒயர்கள் கொண்டு வரப்பட்டு, மூன்று மணி நேரத்தில் சிக்னல், கேட் செயல்பாடு இணைப்புகள் சரிசெய்யப்பட்டன; மீண்டும் கேட் திறக்கப்பட்டது. வாகனங்கள் கடந்து செல்ல அனுமதி அளிக்கப்பட்டது.
