/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பெண் குழந்தைகள் தின விழா விருது விண்ணப்பிக்க அழைப்பு
/
பெண் குழந்தைகள் தின விழா விருது விண்ணப்பிக்க அழைப்பு
பெண் குழந்தைகள் தின விழா விருது விண்ணப்பிக்க அழைப்பு
பெண் குழந்தைகள் தின விழா விருது விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : செப் 10, 2024 02:18 AM
உடுமலை;பெண் குழந்தைகள் தின விழாவையொட்டி வழங்கப்படும் விருது பெறுவதற்கு, தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்க மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
தேசிய பெண் குழந்தைகள் தினவிழாவையொட்டி, ஆண்டுதோறும் ஜனவரி மாதம் சிறப்பு விருது பெண் குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது.
நடப்பாண்டில் இந்த விருது பெறுவதற்கான விண்ணப்பித்தல் மற்றும் வழிமுறைகள் குறித்து, திருப்பூர்மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்த விருது பெறும் குழந்தைகளுக்கு, பாராட்டு பத்திரம் மற்றும் ஒரு லட்சத்துக்கான காசோலையும் வழங்கப்படுகிறது.
பிற பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவி செய்தல், பெண் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு முறை, குழந்தை திருமணத்தை தடுத்தல், சமூக அவலங்கள், மூட நம்பிக்கைகள் உள்ளிட்டவற்றுக்கு தீர்வு காண்பதற்கான ஓவியங்கள், கவிதைகள், கட்டுரைகள் வாயிலாக, விழிப்புணர்வு ஏற்படுத்தி இருக்க வேண்டும்.
இந்த விழிப்புணர்வு செயல்களில் சிறப்பாக செயல்பட்ட 13 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட தமிழகத்தை சேர்ந்த பெண் குழந்தைகள் பெயர், முகவரி, புகைப்படம், ஆதார் எண், சாதனைகளின் சான்றுகள் என, ஒரு பக்கத்துக்கு மிகாத ஆதாரங்களுடன் https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம்.
விண்ணப்பிக்க, செப்., 30ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.