/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இலவச தடகள பயிற்சி மாணவருக்கு அழைப்பு
/
இலவச தடகள பயிற்சி மாணவருக்கு அழைப்பு
ADDED : மே 03, 2024 11:37 PM
திருப்பூர்;திருப்பூர் தடகள சங்கம் நடத்தும் இலவச கோடைக்கால பயிற்சி முகாமில் பங்கேற்க ஆர்வமுள்ளவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கருவலுார் ஸ்போர்ட்ஸ் அகாடமி, சாமளாபுரம் ஏ.வி.ஏ.டி., பள்ளி மைதானம், காங்கயம் ரன்னர்ஸ் கிளப், உடுமலை யூ.ஜி.ஏ.சி., மைதானம், ராக்கியாபாளையம் ஐவின்ட்ராக் ஸ்போர்ட்ஸ் கிளப் ஆகிய ஐந்து மையங்களில், தடகள பயிற்சியாளர்கள் காலை, 6:00 முதல், 7:30 மணி வரை, மாலை, 5:00 முதல் 6:30 மணி வரை ஒரு மாத காலம் பயிற்சி வழங்குகின்றனர்.
முன்னதாக, மாநில தடகள சங்க துணைத்தலைவர் சண்முகசுந்தரம், தடகள பயிற்சி முகாமை துவக்கி வைத்தார். மாவட்ட சுற்றுலா வளர்ச்சித்துறை அலுவலர் அரவிந்த்குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
இப்பயிற்சியில் பங்கேற்க விரும்புபவர்கள் 86677 99305 என்ற எண்ணில் அழைக்கலாம்.