/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கோவில் அன்னதானம் மாசுபடலாமா? பரவும் கரும்புகை; பக்தர்கள் அதிருப்தி
/
கோவில் அன்னதானம் மாசுபடலாமா? பரவும் கரும்புகை; பக்தர்கள் அதிருப்தி
கோவில் அன்னதானம் மாசுபடலாமா? பரவும் கரும்புகை; பக்தர்கள் அதிருப்தி
கோவில் அன்னதானம் மாசுபடலாமா? பரவும் கரும்புகை; பக்தர்கள் அதிருப்தி
ADDED : ஜூலை 06, 2024 01:13 AM

திருப்பூர்;கரும்புகை பரவுவதால், ஸ்ரீவிஸ்வேஸ்வரர் கோவில் அன்னதான பணிகள் பாதிக்கப்படுவதாக, பக்தர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், தமிழக அரசு திட்டத்தில், தினமும் அன்னதானம் வழங்கப்படுகிறது. அனைத்து நாட்களிலும், தலா, 50 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. அதற்காக, கோவில் வளாகத்தின், வடமேற்கு மூலையில், அன்னதான மண்டபம், சமையல் கூடம் செயல்பட்டு வருகிறது.
கோவில் வளாகத்தின் மேற்புறம், தனியார் கடைகளின் 'ஸ்டீம்' அடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. அங்கு, எரிக்கப்படும் இடத்தில் இருந்து, புகை செல்ல நான்கு குழாய்கள் பொருத்தப்பட்டுள்ளன. உயரம் மிக குறைவாக பொருத்தியுள்ளதால், அவ்விடத்தில் இருந்து வெளியேறும் புகையால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் பாதிக்கப்படுகின்றனர். கோவில் வளாகம், புகை மூட்டமாக மாறிவிடுகிறது; பக்தர்களுக்கு கண் எரிச்சல் ஏற்படுகிறது.
பக்தர்கள் சிலர் கூறியதாவது:
கோவிலுக்கு மேற்கு பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறுவதால், கோவில் வளாகம் புகை மூட்டமாக காணப்படுகிறது. அருகிலேயே, சமையல் கூடமும், அன்னதான மண்டபமும் உள்ளது. புகை சூழ்ந்துவிடுவதால், தினமும் அன்னதானம் துவங்கும் முன்னதாக, அன்னதான கூட கதவு, ஜன்னல்களை மூடி வைக்க வேண்டியுள்ளது.
அப்படியிருந்தும், கரும்புகை பரவும் போது, உணவு பறிமாறும் போது கரித்துகள் பரவி, உணவில் விழுகிறது. எனவே, கோவிலுக்கு மிக அருகே, ஆபத்தான சூழலில் புகை வெளியேற்றப்படுவதை தடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
கோவில் நிர்வாகம், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் உணவு பாதுகாப்புத்துறையினர் கூட்டாய்வு நடத்தி, அன்னதான பணிக்கு இடையூறு ஏற்படுவதை தடுக்க வேண்டும் என்பது, பக்தர்களின் வேண்டுகோள்.