ADDED : ஆக 22, 2024 12:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் ஈஸ்வரன் கோவில் வீதி, வடக்கு வீதி, அரிசிக்கடை வீதி ஆகிய வீதிகளில் மழை நீர் தேங்கி நிற்காமல் இருக்கும் வகையில் கால்வாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை நீக்கும் பணியில் துாய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர். மண்டல சுகாதார அலுவலர் ராமகிருஷ்ணன், கவுன்சிலர் கண்ணப்பன் ஆகியோர் பார்வையிட்டு துரிதப்படுத்தினர்.
கனமழை காரணமாக, 49வது வார்டு வள்ளியம்மை நகரில் மழை நீர் தேங்கியது. துாய்மை பணியாளர்கள் மூலம் கால்வாய் துார்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இப்பணிகளை நேரில் பார்வையிட்ட மேயர் தினேஷ்குமார் துரிதப்படுத்தி முடிக்க அறிவுறுத்தினார்.