/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் தேர்வர்கள்
/
போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் தேர்வர்கள்
ADDED : மே 01, 2024 12:28 AM

உடுமலை;உடுமலை முதற்கிளை நுாலகத்தில், போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் தேர்வர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
தற்போது பள்ளிகளில் தேர்வுகள் முடிவடைந்து கோடை விடுமுறை துவங்கியுள்ளது. இதனால், மாணவர்கள் பல்வேறு பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். படிப்பை முடித்த மாணவர்கள், போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் வகையில், பல்வேறு பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சில மாணவர்கள் தனியார் பயிற்சி மையங்களில் சேர்ந்து படித்து வருகின்றனர். பெரும்பாலானோர் அரசு நடத்தும் பயிற்சிகளிலும், நுாலகங்களிலும் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். அவ்வகையில், உடுமலை சுற்றுப்பகுதியில், மாதிரி நுாலகமாக டிஜிட்டல் வசதிகளுடன் இருப்பது முதற்கிளை நுாலகம். நாள்தோறும், நுாற்றுக்கும் மேற்பட்ட வாசகர்கள் நுாலகத்தை பயன்படுத்துகின்றனர்.
தற்போது கோடை விடுமுறை துவங்கியுள்ளதால், பள்ளி மாணவர்களும் பயன்படுத்துவதற்கு அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
டி.என்.பி.எஸ்.சி., போட்டித்தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், தற்போது தேர்வர்களும் நுாலகத்தை அதிகளவில் பயன்படுத்த துவங்கியுள்ளனர்.
ஏற்கனவே தேர்வு எழுதிக்கொண்டிருப்பவர்கள், புதிதாக எழுத உள்ளவர்கள் என பலரும் நுாலகத்தை பயன்படுத்த துவங்கியுள்ளனர்.
நுாலகர்கள் கூறியதாவது: போட்டித்தேர்வுகள் ஜூன் மாதம் நடக்க உள்ளது. இதனால் தேர்வர்களும் தீவிரமாக பயிற்சி எடுத்து வருகின்றனர்.
நாள்தோறும் சராசரியாக, 200 வரை தேர்வர்கள் வந்து நுாலகத்தை பயன்படுத்துகின்றனர். போட்டித்தேர்வுகளுக்கென, 15 ஆயிரம் புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன.
அரசு பணிதேர்வுகளுக்கு தயாராகும் தேர்வர்கள், நுாலகத்தை அதிகம் பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு, தெரிவித்தனர்.
எனவே, இந்த வாய்ப்பை பயன்படுத்தி, அரசின் சார்பில் நடத்தப்படும் நுாலகங்களை பயன்படுத்தி சிறந்த பயிற்சி பெறலாம்.