திருப்பூர்;முத்துார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு 1,299 கிலோ கொப்பரை வரத்து இருந்தது.
அதிகபட்சமாக ஒரு கிலோ 90.10 ரூபாய்; குறைந்த பட்சமாக 60.20 ரூபாய்க்கும் ஏலம் போனது. மொத்தம் 1,299 கிலோ கொப்பரை, 1.07 லட்சம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது. இந்த ஏலத்தில் 37 விவசாயிகள் பங்கேற்றனர்.
முத்துார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று டெண்டர் முறையில் தேங்காய் ஏலம் நடந்தது. இதில் முத்துார் சுற்று பகுதி விவசாயிகள் 41 பேர் கலந்து கொண்டனர். விற்பனை கூடத்துக்கு 11,931 தேங்காய்கள் விற்பனைக்கு வந்திருந்தது.
முதல் தரம் ஒரு கிலோ 28.45 ரூபாய்; இரண்டாம் தரம் ஒரு கிலோ 22.05 ரூபாய் என சராசரியாக 28.30 ரூபாய்க்கு ஏலம் போனது. இதில் மொத்தம் 4.7 டன் தேங்காய் மொத்தம் 1.30 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது.விற்பனைக் கூட மேற்பார்வையாளர் சங்கீதா முன்னிலையில் இந்த ஏலம் நடந்தது.